எச். பி. லவ்கிராஃப்ட்

எச். பி. லவ்கிராஃப்ட்

1934ல் லவ்கிராஃப்ட்
பிறப்புஹோவார்ட் ஃபிலிப்ப்ஸ் லவ்கிராஃப்ட்
ஆகத்து 20, 1890(1890-08-20)
பிராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், அமெரிக்கா
இறப்புமார்ச்சு 15, 1937(1937-03-15) (அகவை 46)
பிராவிடென்ஸ், ரோட் தீவு, அமெரிக்கா
புனைப்பெயர்லூயிஸ் தியோபோல்டு, ஹம்பிரே லிட்டில்விட், வார்ட் ஃபிலிப்ஸ், எட்வார்டு சாஃப்ட்லி
தொழில்எழுத்தாளார்
நாடுஅமெரிக்கர்
எழுதிய காலம்1917-1936
இலக்கிய வகைதிகில் புனைவு, அறிபுனை, கனவுருப்புனைவு, காத்திக் புனைவு
இயக்கம்அண்டவியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
"தி கால் ஆஃப் கேதுலு", தி ஷாடோ அவுட் ஆஃப் டைம், அட் தி மவுண்டன்ஸ் ஆஃப் மேட்னஸ்
துணைவர்(கள்)சோனியா கிரீன் (1924–1929)

எச். பி. லவ்கிராஃப்ட் அல்லது ஹெச். பி. லவ்கிராஃப்ட் (H. P. Lovecraft, ஆகஸ்ட் 20, 1890 – மார்ச் 15, 1937) ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். திகில் புனைவு, கனவுருப்புனைவு அறிபுனை ஆகிய பாணிகளில் எழுதியுள்ள இவர் 20ம் நூற்றாண்டு திகில் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

லவ்கிராஃப்டின் படைப்புகள் பெரும்பாலும் அண்டத் திகில் (cosmic horror) என்ற கருப்பொருளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கை மனிதர்களின் மனங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று, அண்டவெளி மனிதர்களுக்கு புலப்பட்டாத ஒன்று என்றும் லவ்கிராஃப்ட் கருதினார். கேதுலூ (Cthulhu) என்ற சக்தி வாய்ந்த வேற்றுலக உயிரினத்தை மையமாகக் கொண்டு லவ்பிராஃப்ட் எழுதிய புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. லவ்கிராஃப்ட் இறந்து எழுபது ஆண்டுகள் கழிந்த பின்னும் கேதுலூ பற்றிய கதைகள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. புதினங்கள் தவிர கேதுலூவைப் பற்றி நிகழ்பட ஆட்டங்கள், படக்கதைகள், படப்புதினங்கள் (graphic novels) என பலவகைப் புனைவுகள் உருவாகியுள்ளன. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இருந்த வாசகர் வட்டத்தைவிட அவரது மறைவுக்குக் பின்னால் பல மடங்கு புதிய வாசகர்கள் உருவாகியுள்ளனர்.

தாக்கங்கள்

எட்கர் ஆலன் போ, கெர்டுரூட் பாரோஸ் பர்னெட் , ராபர்ட் டபிள்யூ சாம்பர்ஸ், டன்சானி பிரபு, ஆல்கெர்னான் பிளாக்வுட், அர்தர் மேக்கன், ஏ. மெர்ரிட், ஆஸ்வால்ட் ஸ்பெங்க்ளர், ஆகஸ்த்திய இலக்கியம்

Other Languages
aragonés: H. P. Lovecraft
asturianu: H. P. Lovecraft
башҡортса: Говард Лавкрафт
беларуская (тарашкевіца)‎: Гаўард Філіпс Лаўкрафт
български: Хауърд Лъвкрафт
Ελληνικά: Χ. Φ. Λάβκραφτ
Esperanto: H. P. Lovecraft
español: H. P. Lovecraft
français: H. P. Lovecraft
Bahasa Indonesia: H.P. Lovecraft
Interlingue: H. P. Lovecraft
íslenska: H. P. Lovecraft
Bahasa Melayu: H. P. Lovecraft
norsk nynorsk: H.P. Lovecraft
português: H. P. Lovecraft
srpskohrvatski / српскохрватски: H. P. Lovecraft
Simple English: H. P. Lovecraft
українська: Говард Лавкрафт
Tiếng Việt: H. P. Lovecraft