உலக பொருளாதார மன்றம்

உலக பொருளாதார மன்றம்
World Economic Forum logo.svg
உருவாக்கம்1971
வகைபொதுநலசேவை
தலைமையகம்கோலோக்னி , சுவிசர்லாந்து
சேவைப் பகுதிஉலகளாவிய சந்திப்புகள்
http://www.weforum.org/

உலக பொருளாதார மன்றம் ஜெனீவா நகரை மையமாக கொண்ட ஒரு பொதுநலசேவை அமைப்பாகும். இவ்வமைப்பின் வருடாந்திர குழுமம் சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்குபெறும் இந்த குழுமத்தில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.

மேலும், இம்மன்றம் சீன நாட்டில் "புதிய சாம்பியன்களின் வருடாந்திர சந்திப்பு" ("Annual Meeting of the New Champions") எனும் குழுமத்தையும், மற்றும் பல இடங்களில் பிராந்திய குழுமங்களையும் வருடம் முழுதும் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஐரோப்பா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, ரஷ்யா முதன்மை செயல் அதிகாரிகள் வட்டசபை, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன அமெரிக்கா போன்ற இடங்களில் இவ்வமைப்பு சந்தித்தது.

2008 ஆம் ஆண்டு துபாயில் பல்வேறு துறைகளை சார்ந்த 700 வல்லுனர்கள் பங்குபெற்ற "உலகளாவிய நிகழ்வுபட்டியலின் துவக்க சந்திப்பு " (Inaugural Summit on the Global Agenda) நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் உலகின் தற்போதைய 68 முக்கியமான பிரச்சனைகள் கண்டெடுக்கப்பட்டது.

உலக பொருளாதார மன்றம் 1971 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த க்லௌஸ் ஷ்வாப் என்னும் பொருளியல் பேராசிரியரால் நிறுவப்பட்டது. மேலும், இந்நிறுவனம் பல்வேறு துறைகளை சேர்ந்த உறுப்பினர்களை ஆராய்ச்சிகள் நடத்த உதவுகின்றது.

க்லௌஸ் ஷ்வாப், முதன்மை செயல் அதிகாரி, உலக பொருளாதார மன்றம்.

வெளி இணைப்புகள்

Other Languages
беларуская (тарашкевіца)‎: Сусьветны эканамічны форум
Bahasa Indonesia: Forum Ekonomi Dunia
Lingua Franca Nova: Foro Economial Mundial
Bahasa Melayu: Forum Ekonomi Dunia
srpskohrvatski / српскохрватски: Svjetski ekonomski forum
Simple English: World Economic Forum
српски / srpski: Svetski ekonomski forum