உரோமையருக்கு எழுதிய திருமுகம்

உரோமையர் திருமுகம் (7:4-7). கிளேர்மோந்து தோற்சுவடி. ஆண்டு: சுமார் கி.பி. 550. கிரேக்கம்-இலத்தீன்

உரோமையர் அல்லது பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Romans) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஆறாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Romaious (Επιστολή προς Ρωμαίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Romanos எனவும் உள்ளது [1]. இம்மடல் தூய பவுல் எழுதிய பிற எல்லா மடல்களை விடவும் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது [2].

விவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல்[3] எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையி்ன் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.

இதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார்.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில்ஆங்கிலத்தில்
உரோமையர்Προς ΡωμαίουςEpistula ad RomanosஉரோRom
1 கொரிந்தியர்Προς Κορινθίους ΑEpistula I ad Corinthios1 கொரி1 Cor
2 கொரிந்தியர்Προς Κορινθίους ΒEpistula II ad Corinthios2 கொரி2 Cor
கலாத்தியர்Προς ΓαλάταςEpistula ad GalatasகலாGal
எபேசியர்Προς ΕφεσίουςEpistula ad EphesiosஎபேEph
பிலிப்பியர்Προς ΦιλιππησίουςEpistula ad PhilippensesபிலிPhil
கொலோசையர்Προς ΚολασσαείςEpistula ad ColossensesகொலோCol
1 தெசலோனிக்கர்Προς Θεσσαλονικείς ΑEpistula I ad Thessalonicenses1 தெச1 Thess
2 தெசலோனிக்கர்Προς Θεσσαλονικείς ΒEpistula II ad Thessalonicenses2 தெச2 Thess
1 திமொத்தேயுΠρος Τιμόθεον ΑEpistula I ad Timotheum1 திமொ1 Tim
2 திமொத்தேயுΠρος Τιμόθεον ΒEpistula II ad Timotheum2 திமொ2 Tim
தீத்துΠρος ΤίτονEpistula ad Titumதீத்Tit
பிலமோன்Προς ΦιλήμοναEpistula ad PhilemonemபிலPhilem

உரோமையர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

தூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலை நகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமை சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28).

மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகிளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவர் கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும்.

பவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார்.

தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்கும்முன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது.

எருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Other Languages
беларуская (тарашкевіца)‎: Пасланьне да рымлянаў
Mìng-dĕ̤ng-ngṳ̄: Lò̤-mā Cṳ̆
čeština: List Římanům
गोंयची कोंकणी / Gõychi Konknni: रंकारांक पावलुचें पत्र
客家語/Hak-kâ-ngî: Lò-mâ-sû
interlingua: Epistola al Romanos
한국어: 로마서
lumbaart: Letera ai Ruman
Plattdüütsch: Römerbreef
Chi-Chewa: Aroma
srpskohrvatski / српскохрватски: Poslanica Rimljanima
Simple English: Epistle to the Romans
slovenčina: List Rimanom
svenska: Romarbrevet
vepsän kel’: Kirjaine rimalaižile
中文: 羅馬書
Bân-lâm-gú: Lô-má-su
粵語: 羅馬書