உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு

இரண்டாம் நிக்கலாஸ்
Nicholas II
உருசியப் பேரரசன்
இரண்டாம் நிக்கலாசின் உருவப்படம்
ஆட்சிநவம்பர் 1, 1894 – மார்ச் 15, 1917
முடிசூட்டு விழாமே 26 [யூ.நா. மே 14] 1896
முன்னிருந்தவர்மூன்றாம் அலெக்சாந்தர்
பின்வந்தவர்பதவி ஒழிக்கப்பட்டது.
வாரிசு(கள்)ஒல்கா நிக்கலாயெவ்னா
தத்தியானா நிக்கலாயெவ்னா
மரீயா நிக்கலாயெவ்னா
அனஸ்தேசியா நிக்கலாயெவ்னா
அலெக்சி நிக்கலாயெவிச்
மரபுரொமானொவ் மரபு
தந்தைமூன்றாம் அலெக்சாந்தர்
தாய்மரீயா பியோதரொவ்னா (டென்மார்க்)

உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (Nicholas II of Russia, உருசிய மொழி: Николай II, Николай Александрович Романов, நிக்கொலாய் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ், மே 18 [யூ.நா. மே 6] 1868 – ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) உருசியப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும்[1] பின்லாந்தின் இளவரசரும் ஆவார்.

இரண்டாம் நிக்கலாசு 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார். முதலாம் உலகப் போரில் உருசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தினார்.[2] ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.

Other Languages
asturianu: Nicolás II
azərbaycanca: II Nikolay
беларуская (тарашкевіца)‎: Мікалай II
български: Николай II (Русия)
brezhoneg: Nikolaz II Rusia
Чӑвашла: Николай II
eesti: Nikolai II
suomi: Nikolai II
français: Nicolas II
հայերեն: Նիկոլայ II
Bahasa Indonesia: Nikolai II dari Rusia
íslenska: Nikulás 2.
日本語: ニコライ2世
қазақша: II Николай
Кыргызча: Николай II
lietuvių: Nikolajus II
македонски: Николај II (Русија)
монгол: II Николай
Bahasa Melayu: Nikolai II dari Rusia
norsk nynorsk: Nikolaj II av Russland
occitan: Nicolau II
پنجابی: نکولس II
русский: Николай II
srpskohrvatski / српскохрватски: Nikola II., ruski car
Simple English: Nicholas II of Russia
slovenščina: Nikolaj II. Ruski
shqip: Nikolla II
Türkçe: II. Nikolay
татарча/tatarça: Николай II
oʻzbekcha/ўзбекча: Nikolay II
Tiếng Việt: Nikolai II của Nga
Bân-lâm-gú: Nikolaj 2-sè