உயிர்ச்சத்து ஏ

All-trans-Retinol2.svgRetinol 3D balls.png
உயிர்ச்சத்து Aயின் பொதுவான உணவு மூலமான இரெட்டினோலின் கட்டமைப்பு

உயிர்ச்சத்து ஏ (வைட்டமின் A, உயிர்ச்சத்து A, vitamin A) என்பது ஒளி-உறிஞ்சும் மூலக்கூறான இரெட்டினல் (en:retinal) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். இதன் பயன்பாடு இருட்டுப்பார்வை மற்றும் நிறப்பார்வை இரண்டுக்கும் மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இரெட்டினோயிக் அமிலம் என்று அழைக்கப்படும் மீண்டும் மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட முடியாத இரெட்டினோலின் (en:retinol) வடிவமாகவும் உயிர்ச்சத்து ஏ மிகவும் மாறுபட்ட பங்கிலும் செயல்படுகிறது, இது தோல் மேலணிக்கலம் மற்றும் ஏனைய கலங்களுக்குத் தேவையான முக்கிய வளரூக்கி போன்ற வளர்ச்சிக்காரணி ஆகும்.

விலங்கு உணவு வகைகளில் உயிர்ச்சத்து ஏயின் முக்கிய வடிவம் இரெட்டினைல் பால்மிடேட் போன்ற எசுத்தராக இருக்கின்றது, இது சிறுகுடலில் மதுசாரமாக (இரெட்டினோல்) மாற்றப்படுகிறது. இரெட்டினோல் வடிவமானது உயிர்ச்சத்துக்களின் சேமிப்பு வடிவமாக செயல்படுகிறது, மேலும் இது அலிடிகைட்டு வடிவ இரெட்டினலுக்கு மாற்றப்படலாம், இரெட்டினலில் இருந்து மீண்டும் இரெட்டினோலுக்கு மாற்றப்படலாம். இரெட்டினோலின் வளர்சிதை வினைமாற்ற பொருளான இரெட்டினோயிக் அமிலம் மீண்டும் இரெட்டினோலாக மீளும் தன்மையற்றது, மேலும் அது பகுதியளவு உயிர்ச்சத்து A தொழிற்பாட்டை மட்டுமே கொண்டதாக இருக்கிறது, மேலும் அது விழித்திரையில் பார்வைச் சுழற்சிச் செயன்பாட்டில் பங்குகொள்வதில்லை.

உயிர்ச்சத்து ஏயின் அனைத்து வடிவங்களும் ஐசோப்ரெனாய்டு சங்கிலி இணைக்கப்பட்டுள்ள பீட்டா-அயனோன் வளையத்தைக் கொண்டிருக்கிறது, இது ரெட்டினைல் குழு என அழைக்கப்படுகிறது. இந்த இரு கட்டமைப்புகளும் உயிர்ச்சத்தின் தொழிற்பாட்டிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது.[1] கேரட்டுகளின் ஆரஞ்சு நிறப்பொருளான பீட்டா-கரோட்டீனானது இரு இணைந்த இரெட்டினைல் குழுக்களாகத் தோற்றமளிக்கின்றன, இவை உடலுக்கு உயிர்ச்சத்து Aயை வழங்குகின்றன. ஆல்பா-கரோட்டின் மற்றும் காமா-கரோட்டின் ஆகியவை ஒற்றை ரெட்டினைல் குழுவைக் கொண்டிருப்பதுடன் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைச் சிறிதளவில் கொண்டிருக்கிறது. ஏனைய வேறு எந்த கரோட்டின்களும் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. கரோட்டினாய்ட்டான பீட்டா-கிரிப்டாக்சாந்தினானது அயனோன் குழுவைக் கொண்டுள்ளது, இது மனிதர்களில் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருக்கிறது.

உயிர்ச்சத்து ஏயை உணவுகளில் இரண்டு அடிப்படை வடிவங்களில் காணலாம், அவை:

  • இரெட்டினோல், விலங்கு உணவு மூலங்களை உண்ணும் போது உயிர்ச்சத்து ஏயின் வடிவமாக இது அகத்துறிஞ்சப்படுகிறது, இது மஞ்சள் நிறமாகவும், கொழுப்பில் கரையக்கூடிய பொருளாகவும் இருக்கிறது. தூய்மையான ஆல்கஹால் (மதுசாரம்) வடிவம் நிலையற்றது என்பதால் இழையங்களில் உயிர்ச்சத்தானது இரெட்டினைல் எசுத்தர் வடிவத்தில் காணப்படுகிறது. இது இரெட்டினைல் அசிடேட் அல்லது பால்மிடேட் போன்ற எசுத்தர்களாகவும் வணிக ரீதியாக உருவாக்கப்படுகிறது.
  • கரோட்டின்களான ஆல்பா-கரோட்டின், பீட்டா-கரோட்டின், காமா-கரோட்டின்; மற்றும் சாந்தோபைல் பீட்டா-கிரிப்டாக்சாந்தின் (அனைத்துமே பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டவை), ஆனால் இவை தவிர்ந்த வேறு எந்த போன்றவை தாவரவுண்ணி மற்றும் அனைத்துண்ணி விலங்குகளில் உயிர்ச்சத்து ஏயாக அவற்றில் உள்ள நொதியங்கள் உதவியுடன் மாற்றப்படுகின்றன, எனினும் பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டிராத கரோட்டினாய்டுகள் உயிர்ச்சத்து Aயாக (இரெட்டினலாக) மாற்றப்படுவதில்லை. பொதுவாகப் புலாலுண்ணிகளில் கரோட்டினாய்டுகள் இரெட்டினலாக மாற்றப்படுவதற்குரிய நொதியமான பீட்டா-கரோட்டின் 15,15'-மோனாக்சிகனஸ் இல்லாதிருப்பதால் அவற்றால் உயிர்ச்சத்து ஏயை உருவாக்கமுடியாதுள்ளது.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Vitamien A
العربية: فيتامين ألف
asturianu: Vitamina A
azərbaycanca: A vitamini
bosanski: Vitamin A
català: Vitamina A
čeština: Vitamín A
Cymraeg: Fitamin A
dansk: Vitamin A
Deutsch: Vitamin A
ދިވެހިބަސް: ވިޓަމިން އޭ
English: Vitamin A
Esperanto: Vitamino A
español: Vitamina A
eesti: A-vitamiin
euskara: A bitamina
فارسی: ویتامین آ
føroyskt: A vitamin
français: Vitamine A
galego: Vitamina A
עברית: ויטמין A
हिन्दी: विटामिन ए
hrvatski: Vitamin A
magyar: A-vitamin
Bahasa Indonesia: Vitamin A
íslenska: A-vítamín
日本語: ビタミンA
la .lojban.: abumoi mivytcuxu'i
Basa Jawa: Vitamin A
ქართული: ვიტამინი A
ಕನ್ನಡ: ಎ ಜೀವಸತ್ವ
한국어: 비타민 A
Lingua Franca Nova: Vitamina A
lietuvių: Vitaminas A
latviešu: A vitamīns
македонски: Витамин А
മലയാളം: ജീവകം എ
монгол: Витамин А
Bahasa Melayu: Vitamin A
नेपाली: भिटामिन ए
norsk: Vitamin A
occitan: Vitamina A
ଓଡ଼ିଆ: ଜୀବସାର କ
ਪੰਜਾਬੀ: ਵਿਟਾਮਿਨ ਏ
polski: Witamina A
português: Vitamina A
русский: Витамин A
Kinyarwanda: Vitamini A
sicilianu: Vitamina A
Scots: Vitamin A
srpskohrvatski / српскохрватски: Vitamin A
සිංහල: විටමින් A
Simple English: Vitamin A
slovenščina: Vitamin A
shqip: Vitamina A
Kiswahili: Vitamini A
తెలుగు: విటమిన్ ఎ
Türkçe: A vitamini
татарча/tatarça: A витамины
тыва дыл: Витамин A
ئۇيغۇرچە / Uyghurche: ۋىتامىن A
українська: Вітамін A
Tiếng Việt: Vitamin A
吴语: 维生素A
中文: 維生素A