உயிரியல் வகைப்பாடு

உயிரியல் வகைப்பாடு

வகைபாட்டியல் (Taxonomy) என்பது (பண்டைக் கிரேக்கம்τάξις taxis, "ஏற்பாடு", -νομία -nomia, "முறை"[1] எனும் சொற்களில் இருந்து பெறப்பட்ட சொல்) உயிரிகள் தமக்குள் பகிரும் பான்மைகளைப் பொறுத்து அவற்றை வரையறுக்கவும் பெயரிடவும் பயன்படும் அறிவியல் ஆகும். உயிரிகள் பல வகையன்களாக ஒருங்கிணைத்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகையன்கள் எனும் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் வகைபாட்டியல் தரவரிசை தரப்படுகிறது. இப்படி தரவரிசை தரப்பட்ட குழுக்களை மேலும் ஒருங்கிணைத்து மேனிலைக் குழுக்களாக உயர் தரவரிசையில் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வகைபாட்டியல் படிநிலை உருவாக்கப்படுகிறது.[2][3] சுவீடிய தாவரவியலாளராகிய கார்ல் இலின்னேயசு உயிரியலுக்கான வகைபாட்டியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார், உயிரிகளைப் பகுப்பதற்கும் இருபடிநிலைப் பெயரிடலுக்குமான இவரது வகைபாட்டு அமைப்பு இலின்னேயசு வகைப்பாடு எனப்படுகிறது.

இவ்வாறு, அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், உயிரியல் வகைப்பாடு (biological classification) எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) என்பவர் உயிரிகளை அவற்றின் பொதுவான புறநிலைத் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால உயிரியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதற்கு ஏற்ப கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் சில திருத்தங்கள் செய்யவேண்டி நேர்ந்தது.[4] மூலக்கூற்றுத் வகைபாட்டியலின் (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் உயிரியல் வகைபாட்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொகுதி மரபியல், கிளைபிரிவியல் அல்லது கவைபிரிவியல், அமைப்புசார் வகைபாட்டியல் போன்ற அண்மைக்கால அறிவியல் புலங்கள் தோன்றி வளர்ந்ததும், இலின்னேயசு உயிரியல் வகைபாட்டு அமைப்பு உயிரிகளின் படிமலர்ச்சி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, புத்தியல் உயிரியல் வகைபாடாக படிமலர்ந்தது. வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் வகைப்பாட்டியல் (biological systematics) என்பது முதன்மை வாய்ந்த அறிவியல் வகைபாட்டு முறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது...

Other Languages
aragonés: Taxonomía
asturianu: Taxonomía
català: Taxonomia
Esperanto: Taksonomio
español: Taxonomía
euskara: Taxonomia
suomi: Taksonomia
français: Taxonomie
Bahasa Indonesia: Taksonomi (biologi)
日本語: 分類学
한국어: 분류학
Lingua Franca Nova: Tasonomia
Limburgs: Taxonomie
Ligure: Taxonomïa
lietuvių: Taksonomija
latviešu: Taksonomija
македонски: Таксономија
Bahasa Melayu: Taksonomi (biologi)
norsk nynorsk: Vitskapleg namn
polski: Taksonomia
português: Taxonomia
sicilianu: Tassinumìa
srpskohrvatski / српскохрватски: Taksonomija
српски / srpski: Таксономија
svenska: Taxonomi
Türkçe: Taksonomi
oʻzbekcha/ўзбекча: Taksonomiya