ஈட்டம் (மின்னணுவியல்)

மின்னணுவியலில் ஈட்டம் (gain) அல்லது மின்திறன் பெருக்கம் அல்லது மின்திறன் மிகைப்பு என்பது மின்வலு வழங்கியில் இருந்து குறிப்பலையின் மீது ஆற்றலைச் சேர்த்து ஒரு மின்சுற்றின் (பெரும்பாலும் பெருக்கி) உள்ளீட்டில் இருந்து வெளியீட்டிற்கு செல்லும் குறிப்பலையுடைய வலு அல்லது வீச்சினைக் கூட்டும் திறனைக் காட்டும் அளவாகும். இதனைப் பெரும்பாலும் ஒரு கட்டகத்தின் குறிப்பலை உள்ளீடுடன் குறிப்பலை வெளியீடின் விகிதமாக கணக்கிடப்படும். இதன் மதிப்பு பெரும்பாலும் டெசிபெல்லால் குறிக்கப்பெறும்.

ஈட்டம் என்னும் கலைச்சொல் மின்னணுவியலில் தெளிவற்ற நிலையைத் தருகிறது. ஆகையால், வெளியீடு மற்றும் உள்ளீடு மின்னழுத்தத்தின் விகிதம் மின்னழுத்த ஈட்டம் எனவும், மின்சாரத்தின் விகிதம் மின்சார ஈட்டம் எனவும், மின்திறன் அல்லது மின்வலுவின் விகிதம் மின்திறன் அல்லது மின்வலு ஈட்டம் எனவும் விளக்கமாகக் குறிப்பிடலாம். ஒலியியல் மற்றும் பொதுப்பயன்பாட்டு மிகைப்பியியலில், குறிப்பாக செயல்படு மிகைப்பியில், பெரும்பாலும் ஈட்டம் என்பது மின்னழுத்த ஈட்டத்தினைக் குறிக்கும். ஆனால் வானொலி மிகைப்பியியலில், ஈட்டம் என்றால் அது திறன் ஈட்டத்தைக் குறிக்கும். இதற்குமேல், ஈட்டம் என்ற கலைச்சொல்லை உள்ளீடும், வெளியீடும் வெவ்வேறு அலகுகள் கொண்ட உணரிகள் போன்ற கட்டகங்களிலும் கூட பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஒளியுணரியின் துலக்கத்திறனை ஓர் ஒளியனில் 5 மைக்ரோவோல்டுகள் என்பனப் போன்று.

  • மடக்கை அலகுகள் மற்றும் டெசிபெல்கள்

மடக்கை அலகுகள் மற்றும் டெசிபெல்கள்

திறன் ஈட்டம்

பருமனறி விதியின் படி, திறன் ஈட்டத்தை டெசிபெல்லில் பின்வருமாறு எழுதலாம்:

இங்கு, Pin மற்றும் Pout என்பது உள்ளீடு மற்றும் வெளியீடு மின்திறன்கள் என்க.

இது இயல் மடக்கையில் பின்வருமாறு தரப்படும்:

இங்கு, திறனீட்டம் நேப்பர் அலகில் () தரப்படுகிறது.

Other Languages
العربية: كسب كهربائي
català: Guany
Ελληνικά: Απολαβή
हिन्दी: लब्धि
hrvatski: Pojačanje
Bahasa Indonesia: Bati (elektronika)
한국어: 이득
Nederlands: Versterkingsfactor
português: Ganho
Basa Sunda: Gain
Tagalog: Ganansya
Tiếng Việt: Độ khuếch đại
吴语: 增益
中文: 增益