இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
Heathrow T5.jpg
இலண்டன் ஹீத்ரோ முனையம் 5 கட்டிடம்
ஐஏடிஏ: LHRஐசிஏஓ: EGLL
– WMO: 03772
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்பிஏஏ நிறுவனம்
இயக்குனர்ஹீத்ரோ வானூர்தி நிலைய நிறுவனம்
அமைவிடம்இல்லிங்டன் பரோ, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
மையம்
  • பிரிட்டிஷ் ஏல்வேசு
  • பிஎம்ஐ
உயரம் AMSL83 ft / 25 m
ஆள்கூறுகள்51°28′39″N 000°27′41″W / 51°28′39″N 000°27′41″W / 51.47750; -0.46139
இணையத்தளம்www.heathrowairport.com
நிலப்படம்
EGLL is located in Greater London
EGLL
EGLL
இலண்டன் பெருநகரில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீஅடி
09L/27R312,799காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
09R/27L312காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
புள்ளிவிவரங்கள் (2011+2010)
பயணியர்65
பயணியர் மாற்றம் 09-10[[.
வானூர்தி இயக்கங்கள்454
இயக்கங்கள் மாற்றம் 09-10[[.
மூலம்: தேசிய வான் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐரோகண்ட்ரோலில் உள்ள யூகே வான்ப்பறப்பு தகவல் பதிப்பு
ஐக்கிய இராச்சிய குடிமை வான்பறப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் புறப்படத் தயாராக வரிசையில் காத்திருக்கும் வானூர்திகள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், முனையம் 3

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், (London Heathrow Airport) அல்லது ஹீத்ரோ[1] ஐக்கிய இராச்சியத்தின் முதன்மையான, மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையம் ஆகும். ஹீத்ரோ ஐரோப்பாவின் மிகவும் பயணியர் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விடக் கூடுதலான பன்னாட்டு பயணியர் போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.[2]

ஹீத்ரோ பிஏஏ நிறுவனத்திற்கு உடமையானது; அந்நிறுவனமே இந்த வானூர்தி நிலையத்தை இயக்குகிறது. இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் மேலும் ஆறு நிலையங்கள் உடமையாக உள்ளன.[3] இந்த நிறுவனம் எசுப்பானிய ஃபெரோவியல் நிறுவனத்திற்கு சொந்தமானது.[4] பிரித்தானிய ஏர்வேசின் முதன்மை அச்சுமையமாக ஹீத்ரோ விளங்குகிறது; பிஎம்ஐ நிறுவனத்திற்கு பெரிய அச்சு மையமாக உள்ளது.

ஹீத்ரோ மத்திய இலண்டனின் மேற்கில் 15 miles (24 km) தொலைவில் இல்லிங்டன் பரோவில் 12.14 சதுரகி.மீ (4.69 ச.மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரு இணையான ஓடுபாதைகள் கிழக்கு மேற்காக உள்ளன. ஐந்து வானூர்தி நிலைய முனையங்கள் உள்ளன. மூன்றாவது ஓடுபாதை அமைக்க திட்டங்கள் உரையாடப்படுகின்றன.

ஓடுபாதை பயன்பாடு

ஹீத்ரோ இரண்டு ஓடுபாதைகளையும் செயல்பாட்டில் வைத்துள்ளது. இவை:

  • வடக்கு ஓடுபாதை (09L/27R)
  • தெற்கு ஓடுபாதை (09R/27L).

தற்போது, அந்த நேரத்தில் மேற்கொள்ளும் அணுக்கப் பாதையையொட்டி, ஒரு ஓடுபாதை புறப்படுவதற்கும் மற்றொன்று இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அணுகுகின்ற வானூர்திகளுக்கு பொதுவாக இரு தேர்வுகளுக்கும் இடையே 12 மணிநேர சுழற்சியில் ஓடுபாதைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அண்மையில் வசிப்போருக்கு இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாதும் உள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடி கூடினால் இரு ஓடுபாதைகளிலும் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கப்படும்.

Other Languages
azərbaycanca: Hitrou Hava Limanı
беларуская: Аэрапорт Хітроў
български: Летище Хийтроу
客家語/Hak-kâ-ngî: Lùn-tûn Hî-sṳ̂-lu Kî-chhòng
қазақша: Хитроу
한국어: 히스로 공항
Lingua Franca Nova: Airoporto de Heathrow
русский: Хитроу
srpskohrvatski / српскохрватски: Heathrow
Simple English: London Heathrow Airport
српски / srpski: Аеродром Хитроу
українська: Хітроу
Tiếng Việt: Sân bay London Heathrow