இலக்கியம்

இலக்கியம் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.[1] இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. இன்பியல் இலக்கியம்
  2. அறிவியல் இலக்கியம்

'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்".[2] அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.

தமிழ் இலக்கியம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கியம்

தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம்.[3] அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாகக் கருதப்படுகின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி அறிவியல் தமிழை வளக்க தமிழ்நாடு அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.

வரலாறு

முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல்வாயிலாக அறியமுடிகிறது.

"காமநூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்"

அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம்பாடலான பேரகத்தியத் திரட்டு,மேற்.1 இல்,

"இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்இன்று ஆகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்."என்பதில் தான் இலக்கியம் எனும் சொல்லாட்சி எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் ஆகிய பொருளில் குறிப்பிடப் பெறாமல்,கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு எனச் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பாடல் யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான், மேற்கு நாட்டுக் கல்வியைப் பயின்று சிறந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களும் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களும் ஆங்கிலத்தில் வழங்கிவரும் 'லிட்டிரேச்சர்'(Literature)என்னும் சொல்லிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாக இதனை வழக்கிற்குக் கொண்டு வந்துள்ளனர்.

[4]

பாவாணரின் கருத்து

மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை,பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும் உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்.ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்;அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ்,ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை.[5]

இந்நிலையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இலக்கியம் என்னும் சொல்லிற்குப் பின்வரும் வகையில் தரும் விளக்கம் புதுமையும் முன்மைத் திறனும்(Originality) உடையதாகக் காணப்படுகின்றது.

"இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி;குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம்.சிறந்த மொழிக் குறிக்கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம். இலக்கணத்திற்கு அணங்கம் என்றும் இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.

இலக்கு-லஷ்(வ) இலக்கியம்-லஷ்ய(வ) இலக்கணம்-இலஷணம்(வ) இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் போல் லஷண லஷய என்னும் வடசொற்கள் மொழியமைதியையும்(Grammar), நூற்றொகுதியையும்(Literature) குறிப்பதில்லை என்பது பாவாணரின் துணிவாகும்.இத்தகைய எண்ணப் போக்கே பரவலாகத் தமிழ் அறிஞர்கள் இடையே நிலவி வருகிறது.[6]

Literature என்னும் ஆங்கிலச் சொல் இலக்கியம் எனும் பொருளில் கிபி ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில்(1812)தான் வழக்கிற்கு வந்ததென்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்துரைக்கின்றது.[7]

வரையறை

இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது.மனிதனின் சிந்தனைக்கும்,உணர்வுக்கும்,கற்பனைக்கும் விருந்தாக அமைவது;மனிதனின் மொழியோடு தொடர்புடையது;சொற்கோலமாக விளங்குவது;குறிப்பிட்ட ஒரு வடிவினை;செய்யுளாலோ,உரைநடையாலோ உடையது;கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும் இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது;இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார். [8]


Other Languages
Afrikaans: Letterkunde
Alemannisch: Literatur
አማርኛ: ሥነ ጽሑፍ
aragonés: Literatura
العربية: أدب
অসমীয়া: সাহিত্য
asturianu: Lliteratura
Aymar aru: Qullasïwi
azərbaycanca: Ədəbiyyat
تۆرکجه: ادبیات
башҡортса: Әҙәбиәт
Boarisch: Literatua
žemaitėška: Literatūra
беларуская: Літаратура
беларуская (тарашкевіца)‎: Літаратура
български: Литература
भोजपुरी: साहित्य
বাংলা: সাহিত্য
brezhoneg: Lennegezh
bosanski: Književnost
буряад: Удха зохёол
català: Literatura
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ùng-hŏk
нохчийн: Литература
Cebuano: Katitikan
کوردی: وێژە
čeština: Literatura
kaszëbsczi: Lëteratura
Чӑвашла: Литература
Cymraeg: Llenyddiaeth
dansk: Litteratur
Deutsch: Literatur
Zazaki: Edebiyat
ދިވެހިބަސް: އަދަބިއްޔާތު
Ελληνικά: Λογοτεχνία
English: Literature
Esperanto: Literaturo
español: Literatura
eesti: Kirjandus
euskara: Literatura
estremeñu: Literatura
فارسی: ادبیات
Võro: Kirändüs
føroyskt: Bókmentir
français: Littérature
arpetan: Litèratura
Nordfriisk: Literatuur
furlan: Leterature
Frysk: Literatuer
Gaeilge: Litríocht
贛語: 文學
Gàidhlig: Litreachas
galego: Literatura
Gaelg: Lettyraght
客家語/Hak-kâ-ngî: Vùn-ho̍k
Hawaiʻi: Moʻokalaleo
עברית: ספרות
हिन्दी: साहित्य
Fiji Hindi: Literature
hrvatski: Književnost
Kreyòl ayisyen: Literati
magyar: Irodalom
interlingua: Litteratura
Bahasa Indonesia: Sastra
Interlingue: Literatura
Ilokano: Literatura
íslenska: Bókmenntir
italiano: Letteratura
日本語: 文学
Patois: Lichicha
Basa Jawa: Sastra
ქართული: ლიტერატურა
Qaraqalpaqsha: A'debiyat
Taqbaylit: Tasekla
қазақша: Әдебиет
ಕನ್ನಡ: ಸಾಹಿತ್ಯ
한국어: 문학
Перем Коми: Лыддьӧтан
къарачай-малкъар: Адабият
कॉशुर / کٲشُر: اَدَب
kurdî: Wêje
Кыргызча: Адабият (илим)
Latina: Litterae
Ladino: Literatura
Lëtzebuergesch: Literatur
лакку: Адабият
Lingua Franca Nova: Leteratur
Limburgs: Literatuur
lietuvių: Literatūra
latviešu: Literatūra
Basa Banyumasan: Sastra
Malagasy: Haisoratra
Baso Minangkabau: Sastra
македонски: Книжевност
മലയാളം: സാഹിത്യം
монгол: Утга зохиол
मराठी: साहित्य
Bahasa Melayu: Kesusasteraan
Mirandés: Literatura
မြန်မာဘာသာ: စာပေ
Napulitano: Litteratura
Plattdüütsch: Literatur
Nedersaksies: Literatuur
नेपाली: साहित्य
नेपाल भाषा: साहित्य
Nederlands: Literatuur
norsk nynorsk: Litteratur
norsk: Litteratur
Novial: Literature
Nouormand: Littéthatuthe
occitan: Literatura
Livvinkarjala: Kirjalližus
ਪੰਜਾਬੀ: ਸਾਹਿਤ
Kapampangan: Literatura
Papiamentu: Literatura
Picard: Litérature
polski: Literatura
Piemontèis: Literatura
پنجابی: ساہت
português: Literatura
Runa Simi: Simi kapchiy
română: Literatură
armãneashti: Literaturâ
русский: Литература
русиньскый: Література
Kinyarwanda: Ubuvanganzo
sicilianu: Littiratura
Scots: Leeteratur
سنڌي: ادب
srpskohrvatski / српскохрватски: Književnost
Simple English: Literature
slovenčina: Literatúra
slovenščina: Književnost
Soomaaliga: Suugaan
shqip: Letërsia
српски / srpski: Књижевност
Basa Sunda: Sastra
svenska: Litteratur
Kiswahili: Fasihi
తెలుగు: సాహిత్యం
тоҷикӣ: Адабиёт
Türkmençe: Edebiýat
Tagalog: Panitikan
Türkçe: Edebiyat
Xitsonga: Vutsari
татарча/tatarça: Әдәбият
українська: Література
اردو: ادب
oʻzbekcha/ўзбекча: Adabiyot
vèneto: Łiteratura
Tiếng Việt: Văn học
Winaray: Panuratan
Wolof: Njàngat
吴语: 文學
მარგალური: ლიტერატურა
ייִדיש: ליטעראטור
Vahcuengh: Vwnzyoz
Zeêuws: Literatuur
中文: 文學
文言: 文學
Bân-lâm-gú: Bûn-ha̍k
粵語: 文學