இனப்பெயர்

இனப்பெயர் ஒரு இனக்குழுவுக்கு வழங்கப்பட்ட பெயரைக் குறிக்கும். இனப்பெயர்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். ஒன்று புறப்பெயர். மற்றது தற்பெயர். புறப்பெயர் என்பது பிற இனத்தவரால் ஒரு இனத்தவருக்கு வழங்கப்படும் பெயர். தற்பெயர் என்பது ஒரு இனத்தவர் தாமே தமக்கு வழங்கிக்கொள்ளும் பெயர். எடுத்துக்காட்டாக செருமனியின் பெரும்பான்மை இனத்தவரை ஜெர்மன் (German) என ஆங்கிலத்தில் அழைப்பர். இது அவர்களுக்கு ஆங்கிலேயர் இட்ட பெயர். அதனால், ஜெர்மன் என்பது அவ்வினத்தவரைக் குறிப்பிட வழங்கும் புறப்பெயர். இவ்வினத்தவர் தம்மைத் தாமே டி டொயிச்சென் (die Deutschen) என அழைப்பர். எனவே இது அவர்களைக் குறிக்கும் தற்பெயர்.

தமிழர்

தமிழ் மொழி பேசுவோரைக் குறிக்கும் தமிழர் என்னும் சொல் புறப்பெயரா, தற்பெயரா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் இது வடமொழியினர் மொழிக்கு வழங்கிய ’திரவிட’ என்பதே மருவித் தமிழ் ஆனதாகவும் இதில் இருந்தே தமிழர் என்னும் பெயர் தோன்றியது எனவும் கூறுவர். வேறு சிலர் தமிழ் என்பது தமிழ்ச் சொல் என்றும் அதிலிருந்தே தமிழர் என்னும் இனப்பெயர் உருவானது என்பர்.

Other Languages
العربية: اسم إثني
azərbaycanca: Etnonim
беларуская: Этнонім
български: Етноним
català: Etnònim
čeština: Etnonymum
dansk: Etnonym
Ελληνικά: Εθνωνύμιο
English: Ethnonym
Esperanto: Etnonimo
español: Etnónimo
eesti: Etnonüüm
suomi: Etnonyymi
français: Ethnonymie
galego: Etnónimo
italiano: Etnonimo
қазақша: Этноним
Кыргызча: Этноним
Lëtzebuergesch: Ethnonymie
lietuvių: Etnonimas
latviešu: Etnonīms
олык марий: Этноним
Nederlands: Etnoniem
norsk: Etnonym
polski: Etnonim
română: Etnonim
русский: Этноним
српски / srpski: Етноним
svenska: Etnonym
українська: Етнонім