இசுலாமிய நாட்காட்டி

இசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது 'ஹிஜ்ரா நாட்காட்டி ( அரபு மொழி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری ‎ தக்வீமே ஹெஜிரே கமரீ) ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி(சல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.

ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும். [1]

நாட்காட்டியின் அடிப்படை

இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் ஓட்டத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர்.

Other Languages
العربية: تقويم هجري
azərbaycanca: Hicri təqvim
беларуская (тарашкевіца)‎: Мусульманскі каляндар
Esperanto: Islama kalendaro
हिन्दी: हिजरी
interlingua: Calendario islamic
Bahasa Indonesia: Kalender Hijriyah
日本語: ヒジュラ暦
한국어: 이슬람력
कॉशुर / کٲشُر: اِسلامی تَقويٖم
македонски: Исламски календар
Bahasa Melayu: Takwim Hijrah
norsk nynorsk: Muslimsk tidsrekning
srpskohrvatski / српскохрватски: Islamski kalendar
Simple English: Islamic calendar
slovenčina: Islamský kalendár
slovenščina: Islamski koledar
српски / srpski: Исламски календар
Basa Sunda: Kalénder Islam
Türkçe: Hicrî takvim
татарча/tatarça: Һиҗри тәкъвим
ئۇيغۇرچە / Uyghurche: ھىجرىيە تەقۋىمى
oʻzbekcha/ўзбекча: Islomiy taqvim
Tiếng Việt: Lịch Hồi giáo
吴语: 伊斯兰历
中文: 伊斯兰历
Bân-lâm-gú: Islam Le̍k-hoat
粵語: 回曆