ஆல்பா அலை

ஆல்பா அலை

ஆல்பா அலை (Alpha Wave) என்பது ஒத்தியங்கு மற்றும் ஒத்திசைவு பண்பு கொண்டு எழும் 8-13 ஹெர்ட்ஸ் அதிர்வெண் வரம்பில் மூளை நரம்பு முடிச்சுக்களில் ஏற்படும் நரம்பியல் ஏற்றத்தாழ்வுகள் ஆகும்.

வரலாறு

ஆல்பா அலை ஜெர்மன் நாட்டை சேர்ந்த நரம்பியல் வல்லுநர் ஹான்ஸ் பெர்கர் கண்டுபிடித்தார்.[1] இவரே பிரபலமான எலக்ட்ரோ எக்ஸ்ரே கொண்டு மூளை அலைகளை பதிவு செய்யும் கருவியை முதன் முதலில் பயன்படுத்தினார். இவர் முதன் முதலில் ஆவணப்படுத்திய அலைகளில் பீட்டா அலைகளும் இருந்தன, ஆனால் அவரது ஆர்வம் ஆல்பா அலைகளை குறித்தே இருந்தது. இவரின் பரிசோதனையின் "ஆல்பா தடை" என்பதை ஒருவர் கண்களை திறக்கும் பொழுது அவரது எண்ண அலைகள் பீட்டாவிற்கும் மூடும் பொழுது ஆல்பாவிற்கும் செல்வதை பார்த்து அதில் அவர் ஆர்வம் கொண்டார். இந்த வேறுபாடே ஆல்பா அலைகளுக்கு "பெர்கர் அலை" என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த உடற்செயலியல் மருத்துவர் ப்ரவடிச் நேமின்ச்கி (Pravdich-Neminski) இழைக்கல்வனோமானி அல்லது நாடாகால்வணாமீட்டர்(Signal galvanometer) மூலம் ஒரு நாயின் மூளையின் மின்சமிக்கைகளை படம் எடுத்தார். இது ஹான்ஸ் பெர்கருக்கு உந்துதலை தந்தது, அது போன்ற ஒரு சோதனையின் மூலமே அவர் மனித மூளையின் மின்சமிக்கைகள் இருப்பதை உறுதி செய்தார். அவர் முதலில் மண்டையில் சேதம் அடைந்த நோயாளிகளுக்கு ஊக்கம் அளித்து அவர்களின் மூளையில் மின்சமிக்கைகள் இருப்பதையும் அதன் அளவீடுகளையும் பதிவு செய்தார். பின்னர் அவர் மூளைக்கு ஊக்கம் அளிப்பதை தவிர்த்து மூளையின் இயல்பான மின் சுழற்சிகள் தாள அளவினை அளவிட தொடங்கினார். இவ்வளவு ஒளிர்மையுடன் இருந்த பெர்கர் இது போன்ற பல தரவுகளை துல்லியமாக பதிந்திருந்தாலும் அவர் தனது முடிவை ஐந்து வருடங்களுக்கு பிறகே வெளியிட்டார்.

Other Languages
English: Alpha wave
español: Ondas alfa
français: Rythme alpha
հայերեն: Ալֆա-ռիթմ
italiano: Ritmo alfa
日本語: アルファ波
Nederlands: Alfagolven
polski: Fale alfa
русский: Альфа-ритм
українська: Альфа-ритм
Tiếng Việt: Sóng alpha
吴语: Α波
粵語: Α 波