ஆர்மோன் மருத்துவம்

ஆர்மோன் மருத்துவம் அல்லது இயக்குநீர் மருத்துவம் (ஆங்கிலம்:Hormone therapy) என்பது ஆர்மோன் என்றறியப்படும் இயக்குநீரைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு மருத்துவச் சிகிச்சை முறை. ஆர்மோன்கள் என்பவை நாளமில்லா சுரப்பிகளில் தோற்றுவிக்கப்படும் மிக முக்கியமான வேதிப்பொருட்களாகும். இவை உடலின் பல பகுதிகளிலும் பயன்படுகின்றன. சூல்பை, தைராய்டு, பிசூட்டரி போன்றவை மிக முக்கியமான ஆர்மோன் சுரப்பிகளாகும். புற்றுநோய் மருத்துவத்தில் ஆர்மோன்கள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.எனினும் ஆர்மோன் மருத்துவம் முதல்நிலை மருத்துவமுறை ஆகாது. அறுவை மருத்துவம், கதிர் மருத்துவம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆர்மோன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

Other Languages
العربية: علاج هرموني
español: Hormonoterapia
français: Hormonothérapie
Nederlands: Hormoonbehandeling
português: Terapia hormonal
Tiếng Việt: Liệu pháp hormon