ஆராத், இசுரேல்

ஆராத்
எபிரேயம் transcription(s)
 • ISO 259ʕarad
ஆராத்தின் காட்சி
ஆராத்தின் காட்சி
Official logo of ஆராத்
ஆராத்தின் சின்னம் – நிறம் மாறுபடும்
உருவாக்கம்21 நவம்பர் 1962
அரசு
 • வகைநகர் (1995 முதல்)
 • மேயர்டலி புலோஜ்கோவ்
பரப்பளவு
 • மொத்தம்93,140.14
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்24
பெயரின் கருத்துடெல் ஆராத் என்பதிலிருந்து பெயர் பெற்றது
இணையதளம்http://www.arad.muni.il

ஆராத் (Arad, எபிரேயம்: עֲרָד இந்த ஒலிக்கோப்பு பற்றி (audio); அரபு மொழி: عِرَادَ) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது நெகேவ் மற்றும் யூதேயப் பாலைவனங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது சாக்கடலின் மேற்கில் 25 கி.மீ (15.5 மைல்) தூரத்திலும், பெர்சபாவிற்கு கிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தூரத்திலும் உள்ளது. இந்நகரம் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள அஸ்கெனாசி, செப்பராடி யூதர், பெடோயின்கள், கறுப்பு எபிரேயர் உட்பட்டவர்களுக்கும், புதிதாகக் குடியேறியவர்களுக்கும் என 24,229 மக்கள் தொகையினரின் வீடாகவுள்ளது. இந்நகரம் அதன் சுத்தமான, உலர்ந்த காற்று ஆகியவற்றால் உலகளவில் ஈழை நோய்க்கு ஒரு முக்கிய தளமாகவும் இருக்கிறது.[2][3]

1920 களில் இப்பகுதியில் குடியேற முயற்சி செய்த பின், ஆராத் இசுரேலில் முதல் திட்டமிட்ட நகராக, ஒர் இசுரேலிய வளர்ச்சி நகரமாக நவம்பர் 1962 இல் நிறுவப்பட்டது. 1990 இல் பொதுநலவாய சுதந்திர நாடுகளில் இருந்து அலியாவுடன் ஆராத் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து, 2002 இல் 24,500 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது.

ஆராத்தின் சுவடுகளாக டெல் ஆராத்தின் இடிபாடுகள், ஆராத் பூங்கா, ஒரு உள்நாட்டு விமானத்தளம், இசுரேலின் முதலாவது சட்டபூர்வு பந்தயச் சுற்று ஆகியன காணப்படுகின்றன. இந்நகரம் அதன் ஆண்டு கோடை இசை விழாவான "ஆராத் விழா" மூலம் நன்கு அறியப்படுகிறது.[4]

Other Languages
العربية: عراد (النقب)
беларуская: Арад (Ізраіль)
català: Arad (Israel)
čeština: Arad (Izrael)
Deutsch: Arad (Israel)
English: Arad, Israel
Esperanto: Arad (Israelo)
español: Arad (Israel)
français: Arad (Israël)
עברית: ערד
Bahasa Indonesia: Arad, Israel
italiano: Arad (Israele)
ქართული: არადი
Nederlands: Arad (Israël)
norsk nynorsk: Arad i Israel
português: Arad (Israel)
română: Arad, Israel
Tagalog: Arad
Türkçe: Arad, İsrail
українська: Арад (Ізраїль)
Tiếng Việt: Arad, Israel
ייִדיש: ערד, ישראל