ஆப்பிரிக்காவின் கொம்பு

ஆப்பிரிக்காவின் கொம்பு
Horn of Africa
ஆப்பிரிக்கக் கொம்பின் வரைபடம்
பரப்பளவு 2,872,857 கிமீ
மக்கள்தொகை 100,128,000
நாடுகள்   எரித்திரியா,   ஜிபுட்டி,   எதியோப்பியா,   சோமாலியா
நேரவலயம் UTC+3
மொழிகள் அபரம், அமாரியம், அரபு, ஒரோமோ, சோமாலி, திகிரி, திகிரினியா
பெரிய நகரங்கள்
எதியோப்பியாவின் கொடி அடிஸ் அபாபா
ஜிபுட்டியின் கொடி சிபூட்டி நகரம்
எரித்திரியாவின் கொடி அஸ்மாரா
சோமாலியாவின் கொடி மொகடிசு

ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இப்பகுதி வடகிழக்கு ஆப்பிரிக்கா என்றும் சோமாலியத் தீபகற்பம் எனவும் குறிப்பிடப்பிடப்படுகிறது. இத்தீபகற்பத்தின் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும் [1] [2] [3] [4]. இதன் பரப்பு 2,000,000 சதுர கிமீ (772,200 சதுர மைல்) ஆகும். இப்பகுதியில் தோராயமாக 100 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.

புவியியல்

இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இங்கு வடமேற்கு எத்தியோப்பியாவில் உள்ள சிம்மியன் மலைத் தொடர் உயரமானதாகும். நிலநடுக் கோடுக்கு அண்மையில் இருந்த போதும் இப்பகுதியின் தாழ்நிலங்கள் வறட்சியால் தரிசாக உள்ளது. இதற்கு காரணம் பருவத்துக்குரிய மழைப்பொழிவை சாகில் மற்றும் சூடான் பகுதிகள் மேற்கில் இருந்து வீசும் பருவக்காற்று மூலம் பெறுகின்றன மேலும் அக்காற்று சிபூட்டி & சோமாலியாவை அடையும் போது ஈரப்பதத்தை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக பருவக்காற்று மூலம் இப்பகுதி குறைவான மழைப்பொழிவையே பெறுகிறது. மேற்கு மற்றும் நடு எத்தியோப்பியா, தென் பகுதி எரித்திரியா ஆகியவை அதிக மழைப்பொழிவையே பெறுகிறது. எத்தியோப்பாவில் உள்ள மலைகள் ஆண்டுக்கு 2000 மிமீ (80 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாரா ஆண்டுக்கு 570 மிமீ (23 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகிறது. எத்தியோப்பியாவிற்கு வெளியில் உள்ள பகுதிகளுக்கும் இங்கு பெய்யும் மழையே நீருக்கான ஆதாராமாகும். குறிப்பாக எகிப்து இங்கு பெய்யும் மழையையே தன் நீராதாரத்திற்கு நம்பியுள்ளது. மழைப்பொழிவை கணக்கில் கொண்டால் எகிப்தே உலகின் மிக வறண்ட நாடாகும். குளிர் காலத்தில் வடகிழக்கிலிருந்து வீசும் அயனக்காற்று வட சோமாலியாவிலுள்ள மலைப்பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு போதுமான ஈரப்பதத்தை தருவதில்லை. வட சோமாலிய மலைப்பகுதிகள் பின் இலையுதிர் காலத்தில் ஆண்டுக்கு 500 மிமீ (20 அங்குலம்) மழைப்பொழிவை பெறுகின்றன. கடற்கரை பகுதிகளில் காற்று கடலை நோக்கி செல்லுவதாலும் காற்று நிலம் மற்றும் கடலுக்கு இணையாக வீசுவதாலும் ஆண்டுக்கு குறைவான அளவில் 50 மிமீ (2 அங்குலம்) மழைப்பொழிவையே பெறுகின்றன.

Other Languages
asturianu: Cuernu d'África
azərbaycanca: Afrika buynuzu
brezhoneg: Korn Afrika
bosanski: Afrički rog
čeština: Africký roh
Cymraeg: Corn Affrica
Esperanto: Korno de Afriko
Nordfriisk: Hurn faan Afrikoo
Avañe'ẽ: Áfrika Ratĩ
hrvatski: Afrički rog
Bahasa Indonesia: Tanduk Afrika
íslenska: Horn Afríku
italiano: Corno d'Africa
Basa Jawa: Sungu Afrika
Lëtzebuergesch: Har vun Afrika
македонски: Африкански Рог
Bahasa Melayu: Tanduk Afrika
မြန်မာဘာသာ: အာဖရိက ဦးချိုဒေသ
Nederlands: Hoorn van Afrika
norsk nynorsk: Afrikas horn
occitan: Bana d'Africa
português: Corno de África
română: Cornul Africii
русиньскый: Африканьскый ріг
srpskohrvatski / српскохрватски: Afrički rog
Simple English: Horn of Africa
slovenčina: Africký roh
slovenščina: Afriški rog
Soomaaliga: Geeska Afrika
српски / srpski: Рог Африке
svenska: Afrikas horn
Kiswahili: Pembe la Afrika
Türkçe: Afrika Boynuzu
татарча/tatarça: Сомали ярымутравы
Tiếng Việt: Sừng châu Phi
მარგალური: სომალიშ ჩქონი
中文: 非洲之角
Bân-lâm-gú: Hui-chiu-kak
粵語: 非洲之角