ஆனந்த குமாரசுவாமி

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி
Ananda Kentish Coomaraswamy
Coomaraswamy.jpg
1916 இல் ஆனந்த குமாரசுவாமி
பிறப்புஆகஸ்ட் 22, 1877
கொழும்பு, இலங்கை
இறப்புசெப்டம்பர் 9, 1947(1947-09-09) (அகவை 70)
பொஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
பணிஓவியர், ஆய்வாளர், நூலாசிரியர்
அறியப்படுவதுமெய்யியலாளர், வரலாற்றாளர்
சமயம்இந்து
பெற்றோர்சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி
வாழ்க்கைத்
துணை
எத்தெல் மேரி, ரத்னா தேவி, டோனா லூசா
பிள்ளைகள்நாரதா, ரோகினி, ராமா குமாரசுவாமி
வலைத்தளம்
http://www.coomaraswamy.com/

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.

வாழ்க்கைச் சுருக்கம்

சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற 'எதெல் மேரி' (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்த குமாரசுவாமி ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமக்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராக விளங்கினார்.

எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையின் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.

Other Languages