ஆனக்கொண்டா பாம்பு

அனகொண்டா
Eunectes notaeus.jpg
மஞ்சள் ஆனக்கொண்டா, (Eunectes notaeus)
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கினம்
தொகுதி:முதுகுநாணி
வகுப்பு:ஊர்வன
வரிசை:செதிலுடைய ஊர்வன
துணைவரிசை:பாம்பு
குடும்பம்:Boidae
துணைக்குடும்பம்:Boinae
பேரினம்:Eunectes
வாக்லர், 1830
இனம்

E. beniensis
E. deschauenseei
E. murinus
E. notaeus

ஆனக்கொண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே காணப்ப்படுகின்றது (பெரு, கொலம்பியா, பொலிவியா, பிரேசில், வெனிசுலா). இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை.

நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். தடிப்பு 30 செ.மீ இருக்கும். உலகிலேயே எடையில் அதிகமான இடத்தைப் பிடித்திருப்பது இப்பாம்புதான் (ஒன்று 250 கிலோ இருந்ததாக கண்டு இருக்கின்றனர்). இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றை சுற்றி வளைத்து நொறுக்கிக் கொன்று உண்ணும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை உண்ணுகின்றது, ஆனால் நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் முழுகடித்தும் கொல்லும் என்கிறார்கள். ஒரொவொருக்கால் (எப்பொழுதாவது), மாட்டிக்கொள்ளும் சிறுத்தைப் புலியையும் உண்ணும்.

ஆனக்கொண்டாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பச்சை நிறம் கொண்டது ஒன்று, மஞ்சள் நிறம் கொண்டது (மஞ்சளும் கருப்பும் கொண்டது) ஒன்று, பொலிவியாவில் 2002 ஆம் ஆண்டில் லுட்ஸ் டிர்க்ஸன் (Lutz Dirksen) கண்டுபிடித்த பொலிவிய ஆனக்கொண்டான் ஒன்று, பிரேசிலில் வடகிழக்கே கானப்படும் கருப்பு திட்டுகள் உள்ள வகை ஒன்று.

தமிழில் ஆனைக்கொன்றான் என்னும் பெயரின் அடிப்படையில் இப்பாம்பிற்கு இப்பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.[1][2]

Other Languages
العربية: أناكوندا
azərbaycanca: Anakondalar
български: Анаконди
català: Anaconda
Cebuano: Eunectes
čeština: Anakonda
dansk: Anakonda
Deutsch: Anakondas
Zazaki: Anakonda
Ελληνικά: Ανακόντα
English: Eunectes
Esperanto: Anakondo
español: Eunectes
eesti: Anakonda
euskara: Anakonda
فارسی: آناکوندا
suomi: Anakondat
français: Eunectes
Gàidhlig: Anaconda
galego: Anaconda
עברית: אנקונדה
hrvatski: Anakonde
magyar: Eunectes
հայերեն: Անակոնդաներ
Bahasa Indonesia: Anakonda
italiano: Eunectes
日本語: アナコンダ
қазақша: Анакондалар
ಕನ್ನಡ: ಅನಕೊಂಡ
한국어: 아나콘다
lietuvių: Anakonda
latviešu: Anakondas
македонски: Анаконди
മലയാളം: അനക്കോണ്ട
Bahasa Melayu: Anakonda
Nederlands: Anaconda's
norsk: Anakondaer
polski: Eunectes
português: Sucuri
română: Eunectes
русский: Анаконды
Scots: Eunectes
Simple English: Anaconda
Seeltersk: Anakondas
svenska: Anakondor
Tagalog: Anakonda
Türkçe: Anakonda
українська: Анаконди
oʻzbekcha/ўзбекча: Anakondalar
Tiếng Việt: Trăn anaconda
Winaray: Eunectes
中文: 水蚺屬