அமெரிக்க ஐக்கிய நாடு

அமெரிக்க ஐக்கிய நாடுகள்
United States of America

கொடி Great Seal
குறிக்கோள்: In God We Trust  (அதிகாரபூர்வ)
E Pluribus Unum  (இலத்தீன்; traditional)
(Out of Many, One)
நாட்டுப்பண்: "The Star-Spangled Banner"

தலைநகரம்வாஷிங்டன், டி.சி
38°53′N 77°01′W / 38°53′N 77°01′W / 38.883; -77.017
பெரிய நகர் நியூயார்க் நகரம்
ஆட்சி மொழி(கள்) நடுவண் வாரியாக எதுவுமில்லை1
தேசிய மொழி ஆங்கிலம்2
மக்கள் அமெரிக்கன்
அரசாங்கம் Federal constitutional republic
 •  குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் (D)
 •  துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் (D)
 •  அவைத்தலைவர் நான்சி பெலோசி(D)
 •  தலைமை நீதிபதி ஜோன் ரொபேட்ஸ்
பிரித்தானிய இராச்சியத்திடமிருந்து விடுதலை
 •  அறிவிப்பு சூலை 4, 1776 
 •  விடுதலையடைந்த நாள் செப்டம்பர் 3, 1783 
 •  குடியரசு ஆன நாள் சூன் 21, 1788 
பரப்பு
 •  மொத்தம் 98,26,630 கிமீ2[1] (3rd/4th3)
37,94,066 சதுர மைல்
 •  நீர் (%) 6.76
மக்கள் தொகை
 •  2018 கணக்கெடுப்பு 33,35,77,000[2] (3rd4)
 •  2000 கணக்கெடுப்பு 281,421,906[3]
 •  அடர்த்தி 31/km2 (180வது)
80/sq mi
மொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $14.264 டிரில்லியன்[4] (1வது)
 •  தலைவிகிதம் $46,859[4] (6வது)
மொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $14.264 டிரில்லியன்[5] (1வது)
 •  தலைவிகிதம் $46,859[4] (17வது)
ஜினி (2015)positive decrease 39.0[6]
மத்திமம்
மமேசு (2014)0.915
அதியுயர் · 8வது
நாணயம் ஐக்கிய அமெரிக்க டாலர் ($) (USD)
நேர வலயம் (ஒ.அ.நே-5 to -10)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே-4 to -10)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +1
இணையக் குறி .us .gov .mil .edu
1. ஐக்கிய அமெரிக்காவின் 28 மாகாணங்களில் ஆங்கிலமே ஆட்சி மொழி. 2.[7] ஆங்கிலமும் ஹவாய் மொழியும் ஹவாய் மாநில ஆட்சி மொழியாகும்
2. அமெரிக்க அரசின் ஆட்சி மொழியும் அதிக மக்களால் (கிட்டத்தட்ட 81 சதவிகிதம்) பேரால் தாய்மொழியாகவும் பேசப்படுகிறது. எசுப்பானியம் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும்
3. ஐக்கிய அமெரிக்கா பெரியதா மக்கள் சீனக் குடியரசு பெரியதா என்பது பிரச்சனையில் உள்ளது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலப்பரப்பு 50 மாநிலங்களின் நிலப்பரப்பு மட்டுமே. பிற பிராந்திய பகுதிகள் கணக்கில் இல்லை
4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமை பெற்றவர்களுடன் குடியுரிமை பெறாதவர்களும் உள்ளடங்குவர். பிற பிராந்தியப் பகுதிகளில் வாழ்வோரும், பிற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை

அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். [fn 1] 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும்[fn 2] மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது. இதன் தலைநகர் வாசிங்டன், டி. சி.. மிகுந்த மக்கள்தொகை கொண்டது நியூயார்க் நகரம். 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் வட அமெரிக்கா பெருநிலத்தில் கனடாவிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. அலாஸ்கா மாநிலம் வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் பெரிங் நீரிணையைக் கடந்து உருசியாவிடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. அவாய் மாநிலம் நடு-அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓர் தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப்பெருங்கடலிலும் கரிபியக் கடலிலும் சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாகவுள்ளது.[13]

உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.[14] அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).[5]

அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும்.[15] தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..

19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்க்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.[16] ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.[17]

பொருளடக்கம்

Other Languages
Alemannisch: USA
አማርኛ: አሜሪካ
aragonés: Estatos Unitos
مصرى: امريكا
Aymar aru: Istadus Unidus
žemaitėška: JAV
Bikol Central: Estados Unidos
беларуская (тарашкевіца)‎: Злучаныя Штаты Амэрыкі
भोजपुरी: अमेरिका
Bahasa Banjar: Amirika Serikat
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: তিলপারাষ্ট্র
Chavacano de Zamboanga: Estados Unidos de America
Mìng-dĕ̤ng-ngṳ̄: Mī-guók
Tsetsêhestâhese: United States
Nēhiyawēwin / ᓀᐦᐃᔭᐍᐏᐣ: ᑭᐦᒋ ᒨᐦᑯᒫᓇᐢᑭᕀ
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Амєрїканьскꙑ Ѥдьнѥнꙑ Дрьжавꙑ
dansk: USA
Thuɔŋjäŋ: Pawuut Matiic
ދިވެހިބަސް: އެމެރިކާ
eʋegbe: United States
emiliàn e rumagnòl: Stat Unî
English: United States
Esperanto: Usono
español: Estados Unidos
estremeñu: Estaus Uníus
Na Vosa Vakaviti: United States
føroyskt: USA
français: États-Unis
arpetan: Ètats-Unis
贛語: 美國
गोंयची कोंकणी / Gõychi Konknni: अमेरिकेचीं संयुक्त राज्यां
Bahasa Hulontalo: Amerika Serikat
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐌰𐌼𐌰𐌹𐍂𐌹𐌺𐌰
客家語/Hak-kâ-ngî: Mî-koet
Fiji Hindi: United States
Kreyòl ayisyen: Etazini
Bahasa Indonesia: Amerika Serikat
Ido: Usa
íslenska: Bandaríkin
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐊᒥᐊᓕᑲ
la .lojban.: mergu'e
Kabɩyɛ: Etaazuunii
Gĩkũyũ: United States
kalaallisut: Naalagaaffeqatigiit
ភាសាខ្មែរ: សហរដ្ឋអាមេរិក
한국어: 미국
kernowek: Statys Unys
Lingua Franca Nova: Statos Unida de America
Luganda: Amerika
Basa Banyumasan: Amerika Serikat
Malagasy: Etazonia
Baso Minangkabau: Amerika Sarikat
Bahasa Melayu: Amerika Syarikat
Dorerin Naoero: Eben Merika
Plattdüütsch: USA
Nederlands: Verenigde Staten
norsk nynorsk: USA
norsk: USA
Sesotho sa Leboa: United States of America
Chi-Chewa: United States
Livvinkarjala: Amerikan Yhtysvallat
Pangasinan: Estados Unidos
Kapampangan: Estados Unidos
Deitsch: Amerikaa
Norfuk / Pitkern: Yunitid Staits o' Merika
پنجابی: امریکہ
português: Estados Unidos
rumantsch: Stadis Unids
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱥᱮᱞᱮᱫ ᱯᱚᱱᱚᱛ
sicilianu: Stati Uniti
srpskohrvatski / српскохрватски: Sjedinjene Američke Države
Simple English: United States
slovenčina: Spojené štáty
Sranantongo: Kondre Makandrameki
Basa Sunda: Amérika Sarikat
svenska: USA
Kiswahili: Marekani
ไทย: สหรัฐ
Setswana: USA
Tok Pisin: Ol Yunaitet Stet
Xitsonga: Amerikha
chiTumbuka: United States
Twi: Amerika
reo tahiti: Fenua Marite
oʻzbekcha/ўзбекча: Amerika Qoʻshma Shtatlari
Tiếng Việt: Hoa Kỳ
Volapük: Lamerikän
吴语: 美国
Vahcuengh: Meijgoz
中文: 美国
文言: 美國
Bân-lâm-gú: Bí-kok
粵語: 美國
isiZulu: IMelika