அமில-கார வினைகள்

ஒரு அமில–கார வினை (acid–base reaction) என்பது ஒரு அமிலம் மற்றும் ஒருகாரம் இவற்றுக்கிடையே நடைபெறும் ஒரு வேதி வினை ஆகும். இந்த வினையானது காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தரும் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும். அமில கார வினைகளின் வழிமுறைகளை விளக்குவதற்கான பல கோட்பாடுகள் எழுந்துள்ளன. இவை அமில கார கோட்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக பிரான்சுடெட் லௌரி அமில கார கோட்பாட்டினைச் சுட்டலாம்.

வாயு மற்றும் திரவ நிலையில் உள்ள அமில-கார வினைகளையோ அல்லது அமில-காரத்தன்மை மிகவும் உணரத்தக்க வகையில் இல்லாத நிலையிலோ பகுத்தாய்வு செய்வதில் இத்தகைய அமில-கார கோட்பாடுகள் மிகவும் எளிதில் உணரத்தக்க வகையில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அமிலங்கள்-காரங்கள் தொடர்பான முதல் கருத்தியல் கோட்பாடு பிரெஞ்சு வேதியியலாளர் அந்துவான் இலவாசியே என்பவரால் கி.பி.1776 ஆம் ஆண்டுவாக்கில் முன்வைக்கப்பட்டது.[1]

அமில-கார கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும், ஒரே கருத்தை வெவ்வேறு வழிகளில் கூறியது போலவும் அமைந்துள்ளதை சிந்திக்க வேண்டியது அவசியமாக உள்ளது.[2] உதாரணமாக, தற்போதைய லூயியின் கோட்பாடு அமிலம் மற்றும் காரத்திற்கான விரிவான, பரந்துபட்ட வரையறையைக் கொடுப்பதாக உள்ளது. ஆனால், பிரான்சுடெட் லௌரி கோட்பாடு அதில் உள்ள ஒரு உட்பிரிவைக் குறிக்கும் வரையறையாகவும், அர்கீனியசு கோட்பாடானது மிகவுகம் குறுகிய அளவிலான வரையறுக்கப்பட்ட வரையறையாகவும் உள்ளது.

Other Languages