அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
யூனியன் பிரதேசம்
Skyline of அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அலுவல் சின்னம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சின்னம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
நாடு இந்தியா
நிறுவப்பட்டது1956-11-01
தலைநகர்போர்ட் பிளேர்
பெரிய நகரம்போர்ட் பிளேர்
மாவட்டங்கள்3
பரப்பளவு
 • மொத்தம்8,249
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்3,80,581
 • அடர்த்தி46
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AN
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Green Arrow Up Darker.svg0.778 (உயர்வு)
அலுவலக மொழிகள்இந்தி, ஆங்கிலம்[2]
இணையதளம்www.and.nic.in
அந்தமான் நிக்கோபார் தீவுகள், போர்ட் பிளேரைச் சுற்றியுள்ள பகுதி பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.

8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

வரலாறு

மூதாதையர்கள்

இன்னும் ஆவணப்படுத்தப்பட்ட முந்தைய தொல்லியல் சான்றுகள் சில 2,200 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது;. எனினும், மரபணு மற்றும் கலாச்சார ஆராய்ச்சி கூறுவது என்னவெனில், உள்நாட்டு அந்தமானீஸ் மக்கள் மத்திய கற்காலம் முதல் மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருதிருக்கலாம் என்று கூறுகின்றது. அந்த கால கட்டத்தில், ஜாரவா. செண்டினல், சாம்பென், ஒன்கே மற்றும் அந்தமானியர் பழங்குடி மக்கள் தங்களுக்கென்று தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய குழுக்களை கொண்டவர்களாக இருந்தனர்.[3] வெளி உலக தொடர்பற்ற இவ்வின மக்களின் தொகை தற்போது அருகிக் கொண்டே வருகிறது.

நிக்கோபார் தீவுகள் பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் வாழ்ந்ததாக தோன்றும். ஐரோப்பிய தொடர்பு கொண்ட காலத்தில், மொன்-குமேர் (Mon-Khmer) மொழி பேசும் நிகோபார்சி பழங்குடி மக்கள் மற்றும் ஷொம்ப்பென் (Shompen) மக்கள் இருந்தனர். ஷொம்ப்பென் (Shompen) மக்களின் மொழி நிச்சயமற்ற தொடர்பு கொண்டதாக இருந்தது. இவ் இரண்டு நிகோபார்சி சமூகத்தினருக்கும், அந்தமானீஸ்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

முன் காலனித்துவ காலத்தில்

ராஜேந்திர சோழன் I (கிபி 1014 முதல் 1042 வரை), ஒரு தமிழ் சோழப்பேரரசர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றி, ஒரு இந்து மதம் மலாய் பேரரசுக்கு (ஸ்ரீவிஜயா பேரரசு, சுமத்ரா மற்றும் இந்தோனேஷியா தீவுகள்) எதிராக ஒரு கடற்படை தளமாக பயன்படுத்தினர். அவர்கள் இத்தீவுகளை தின்மைத்தீவு என்று அழைத்தனர்.

தீவுகள் 17 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேரரசின் ஒரு தற்காலிக கப்பல் தளமாக அமைந்தது. பழம்பெரும் அட்மிரல் கன்ஹோஜி ஒரு அடிப்படை கடற்படை மேலாதிக்கத்தை இத் தீவுகளில் நிலைநிறுத்தியது, இந்தியாவுடன் அந்த தீவுகள் இணைவதற்கு பெறும் பங்கு வகிக்தது.

காலனித்துவ காலத்தில்

டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டச்சுகாரர்கள் டிசம்பர் 12 , 1755 அன்று நிக்கோபார் தீவுகள் வந்த போது தீவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட ஐரோப்பிய குடியேற்றம் வரலாறு தொடங்கியது. 1 ஜனவரி 1756 அன்று, நிக்கோபார் தீவுகள் டச்சுகரர்களின் ஆளுமைக்கு கீழ் வந்தது, அதற்கு புதிய டென்மார்க் (New Denmark) என்று பெயரிட்டனர். பின்னர் ( டிசம்பர் 1756 ) பிரடெரிக் தீவுகள் ( Frederiksøerne ) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1754–1756 காலத்தில் தரங்கம்பாடியில் (Continental டேனிஷ் இந்தியாவில்) இருந்து இத்தீவு நிர்வகிக்கப்பட்டது. இத் தீவுகள் மீண்டும் மீண்டும் 14 ஏப்ரல் 1759 மற்றும் 19 ஆகஸ்ட் 1768, 1787 முதல் 1807/05 வரை, 1814 முதல் 1831 வரை, 1830 முதல் 1834 வரை மற்றும் 1848 முதல் முழுமையாக மலேரியா நோய் பரவியதன் கரணமாக கைவிடப்பட்டன.

1778 ஜூன் 1 முதல் 1784 வரை , ஆஸ்திரியா தவறுதலாக டென்மார்க் நிக்கோபார் தீவுகள் அதன் கூற்றுக்களை கைவிட்டுவிட்டது என்று கருதி, தெரெசிய (Theresia) தீவுகள் என்று மறுபெயரிட்டு, அவர்களுக்கு ஒரு காலனி உருவாக்க முயன்றார் என்று கருதப்படுகிறது.

1789 இல் பிரிட்டிஷ், ஒரு கடற்படை தளம் மற்றும் தண்டனைக்குரிய காலனி அமைக்க, அந்தமான் அடுத்த இப்போது போர்ட் பிளேர் நகரம் உள்ள இடத்தில் முனைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் காலனி கிரேட் அந்தமான் போர்ட் கார்ன்வாலிசுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அது நோயின் காரணமாக 1796 இல் கைவிடப்பட்டது.

டென்மார்க் நாட்டின் பிரவேசம் முறையான ஒரு முடிவை எட்டியது 16 அக்டோபர் 1868 அன்று தனது நிக்கோபார் தீவுகள் உரிமையை ஆங்கிலேயர்களிடம் விற்றவுடன். 1869 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அதனை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்தனர்.

1858 இல் ஆங்கிலேயர்கள் மீண்டும் போர்ட் பிளேயரில் ஒரு காலனி நிறுவினர். இதன் முதன்மை நோக்கம், இந்திய துணை கண்டத்தில் இருந்து எதிர்ப்பாளர்கள் மற்றும் சுதந்திரப்போராளிகளுக்கு ஒரு தண்டனைக்குரிய இடம் அமைக்கவே. இக் காலனி பிரபலமற்ற செல்லுலார் சிறை கொண்டதாக இருந்தது.

1872 ஆம் ஆண்டில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் போர்ட் பிளேயர் ஒரு ஒற்றை தலைமை கமிஷனரின் கீழ் ஒன்றினைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போரின் போது, தீவுகள் பெயரளவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆசாத் ஹிந்த் அதிகாரத்தின் கீழ், நடைமுறையில் ஜப்பான் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. போஸ் யுத்தத்தின் போது தீவுகளுக்கு வந்து "ஷாகித்-dweep" (தியாகிகள் தீவு) மற்றும் "ஸ்வராஜ்-dweep" (சுய ஆட்சி தீவு) என்று அவர் பெயர் மாற்றம் செய்தார்.

இந்திய தேசிய இராணுவ ஜெனரல் லோகநாதன், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1944 பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் சேர்த்து நான்கு ஐ.என்.ஏ. அதிகாரிகள் - மேஜர் மன்சூர் அலி ஆல்வி, சப். லெப்டினென்ட் மேரிலாண்ட் இக்பால், லெப்டினென்ட் Suba சிங் மற்றும் சுருக்கெழுத்தாளர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் சீனிவாசன் வந்தார். 21 மார்ச் 1944 அன்று சிவில் நிர்வாகத்தை தலைமையகம் அபர்தீன் பஜாரில் உள்ள குருத்வாரா அருகே நிறுவப்பட்டது. 2 அக்டோபர் 1944 அன்று, கர்னல் லோகநாதன் மேஜர் ஆல்வியிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப மாட்டேன் என்று போர்ட் பிளேர் விட்டு கிளம்பினார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளை 7 அக்டோபர் 1945 அன்று 116-வது இந்திய காலாட்படை பிரிவு பிரிட்டிஷ் மற்றும் இந்திய படைகள் மூலம் மீண்டும் மீண்டும் கைப்பற்றிய பின் சப்பான் காவற்படை சரணடைந்தனர்.

இந்திய யூனியன் பிரதேசம்

இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.

Other Languages
беларуская (тарашкевіца)‎: Андаманскія і Нікабарскія астравы
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: আন্দামান বারো নিকোবর দ্বীপমালা
गोंयची कोंकणी / Gõychi Konknni: अंदमान आनी निकोबार
कॉशुर / کٲشُر: انڈمان تٔ نِکوبار
မြန်မာဘာသာ: ကပ္ပလီကျွန်း
português: Andamão e Nicobar
srpskohrvatski / српскохрватски: Andamanski i Nikobarski Otoci
slovenčina: Andamany a Nikobary
oʻzbekcha/ўзбекча: Andaman va Nikobar orollari