அணுக்கரு ஆயுதங்கள்

இரோசிமா அணுகுண்டு வெடிப்பின் புகைமண்டலம்

அணுகுண்டு என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.

2,400 pounds (1,100 kg) திணிவுடைய ஒரு ஐதரசன் குண்டு, 1.2 மில்லியன் தொன் TNTயின் வெடிப்பின்போது வெளியிடப்படும் சக்தியிலும் அதிக சக்தியை வெளியிடக்கூடியது. ஆகவே, பாரம்பரியமான ஒரு குண்டிலுஞ் சிறிய அணுவாயுதம் வெடிப்பு, தீ மற்றும் கதிர்ப்பு ஆகியவற்றின் மூலமாக ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது. அணுவாயுதங்கள் பேரழிவு ஆயுதங்களாகக் கருதப்படுவதோடு, இவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடுகளும் சர்வதேச உறவுகளில் பெரிய தாகத்தை ஏற்படுத்த வல்லன.

இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, "சின்னப் பையன்" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு சப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று "குண்டு மனிதன்" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு சப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர்.[1] சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.

இரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.[2][3][4] தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.[5]

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.[2]

வகைகள்

அணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும்.

அணுக்கருப் பிளவு ஆயுதங்கள்

இரண்டு அடிப்படை கருப்பிளவு ஆயுத வடிவமைப்புக்கள்

பாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் அணுகுண்டு எனப்படும்.

அணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும்.

அணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும்.[6]

அனைத்து பிளவுத் தாக்கங்களும் பிளவுப் பொருட்கள் எனப்படும், அணுக்கருவின் கதிர்த் தொழிற்பாடுடைய துகள்களை உருவாக்குகின்றன. பல பிளவுப் பொருட்கள் உயர்கதிர்த் தொழிற்பாடு (குறுகிய வாழ்காலம்) அல்லது நடுத்தரக் கதிர்த் தொழிற்பாடு (உயர் வாழ்காலம்) கொண்டன. இவை கட்டுப்படுத்தா நிலையில் கடும் கதிர்த்தொழிற்பாடு மாசுபாட்டை ஏற்படுத்தும். பிளவுப் பொருட்கள், கட்டுப்படுத்தா அணுக்கருத் தாக்கங்களின் முக்கிய கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களாகும்.

அணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.[7]

அணுக்கரு இணைவு ஆயுதங்கள்

ஐதரசன் குண்டுக்கான டெல்லர் உலம் வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள்:பிளவுக்குண்டு மூலம் உருவாகும் கதிர்ப்பு இணைவு எரிபொருளை நெருக்கவும் வெப்பமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் வெப்ப அணுவாயுதங்கள் அல்லது ஐதரசன் குண்டுகள் எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக ஐதரசன் குண்டுகள் எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.[8]

ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மாத்திரமே இதுவரை வெப்ப அணுக்கரு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. (இந்தியா இவ்வாறான ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.)[9] வெப்ப அணுவாயுதங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் அணுக்கருப் பிளவு ஆயுதங்களிலும் சிக்கலானதாகும். எனினும் இன்று உருவாக்கப்படும் பெரும்பாலான அணுவாயுதங்கள் வெப்ப அணுவாயுத வடிவமைப்பையே பயன்படுத்துகின்றன. ஏனெனில் இது மிகவும் வினைத்திறனுடையதாகும்.

வெப்ப அணுகுண்டுகள், இணைவு எரிபொருளை நெருக்குவதற்கும் வெப்பப் படுத்துவதற்கும் அணுக்கருப் பிளவு ஆயுதச் சக்தியைப் பயன்படுத்துகின்றன. மெகா தொன் சக்தியை வெளிப்படுத்தும் ஐதரசன் குண்டுகளில் பயன்படுத்தப் படும் "டெல்லர் உலம் வடிவமைப்பில்" கருப்பிளவு ஆயுதமும், இணைவு எரிபொருளும் (டிரிடியம், டியூட்டிரியம் அல்லது லிதியம் டியூட்டிரைட்) விசேடமான கதிர்ப்புத் தெறிப்பு கொள்கலன் ஒன்றினுண் அருகருகே வைக்கப்படும். பிளவு ஆயுதம் வெடிக்கும் போது வெளியாகும் காமாக் கதிர்களும் X-கதிர்களும் முதலில் இணைவு எரிபொருளை நெருக்கிப் பின்னர் அதன் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உருவாகும் கரு இணைவுத் தாக்கம் பெரும் எண்ணிக்கையான அதிவேக நியூத்திரன்களை உருவாக்கும். இந் நியூத்திரன்கள் வறிதாக்கப்பட்ட யுரேனியம் போன்ற வலுக்குறைந்த பிளவுப் பொருட்களில் பிளவுத்தாக்கத்தைத் தூண்டும். பிளவு ஆயுதத் தாக்கம் "முதற் படி" எனவும் இணைவுத் தாகம் "துணைப் படி" எனவும் அழைக்கப்படும். பெரியளவிலான மெகா தொன் சக்தி கொண்ட ஐதரசன் குண்டுகளில் வெளிப்படும் சக்தியில் அரைப்பங்கு வறிதாக்கப்பட்ட யுரேனியம் மூலமான பிளவுத் தாக்கத்திலிருந்தே பெறப்படும்.[6]

இண்று உருவாக்கப்படும் பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் மேற்கூறப்பட்ட "இரு படி" ஒழுங்கமைப்பையே பயன்படுத்துகின்றன. ஆயினும் மேலதிக தாக்கப் படிகளையும் சேர்க்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு படியும் அடுத்த படிக்கான எரிபொருளை வெடிக்கச் செய்யும். இதன் மூலம் பெரும் சக்திக் கொள்ளளவு கொண்ட வெப்ப அணுவாயுதங்களை உருவாக்க முடியும். இதுவரை வெடிக்க வைக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது சோவியத் ஒன்றியத்தின் "சார் குண்டு" ஆகும். இதன் வெடிப்பின் போது 50 மெகா தொன் TNT சக்தி வெளியிடப்பட்டது. இது ஒரு மூன்று படி ஆயுதமாகும். பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் இதனிலும் சிறியன. இதற்குக் காரணம், ஏவுகணைகளின் இடப் பற்றாக்குறை மற்றும் நிறை என்பனவாகும்.[10]

Other Languages
Afrikaans: Kernwapen
Alemannisch: Kernwaffe
aragonés: Arma nucleyar
العربية: سلاح نووي
asturianu: Arma nuclear
azərbaycanca: Nüvə silahı
башҡортса: Ядро ҡоралы
žemaitėška: Kondoulėnis gėnklos
беларуская: Ядзерная зброя
беларуская (тарашкевіца)‎: Ядзерная зброя
български: Ядрено оръжие
brezhoneg: Arm nukleel
català: Arma nuclear
čeština: Jaderná zbraň
Cymraeg: Arf niwclear
Deutsch: Kernwaffe
Ελληνικά: Πυρηνικό όπλο
Esperanto: Atombombo
español: Arma nuclear
eesti: Tuumarelv
euskara: Bonba nuklear
suomi: Ydinase
français: Arme nucléaire
Frysk: Kearnwapen
贛語: 核武器
galego: Arma nuclear
गोंयची कोंकणी / Gõychi Konknni: अणुबॉंब
हिन्दी: परमाणु बम
interlingua: Arma nuclear
Bahasa Indonesia: Senjata nuklir
íslenska: Kjarnorkuvopn
italiano: Arma nucleare
日本語: 核兵器
Basa Jawa: Gaman nuklir
қазақша: Ядролық қару
한국어: 핵무기
Lëtzebuergesch: Atomwaff
latviešu: Kodolieroči
македонски: Нуклеарно оружје
മലയാളം: ആണവായുധം
Bahasa Melayu: Senjata nuklear
မြန်မာဘာသာ: အဏုမြူ လက်နက်
नेपाली: परमाणु बम
नेपाल भाषा: आणविक ल्वाभः
Nederlands: Kernwapen
norsk nynorsk: Atomvåpen
occitan: Arma nucleara
ਪੰਜਾਬੀ: ਨਿਊਕਲੀ ਬੰਬ
Pälzisch: Kärnwaff
پنجابی: ایٹم بمب
português: Bomba nuclear
română: Armă nucleară
संस्कृतम्: अण्वस्त्रम्
سنڌي: ائٽم بم
srpskohrvatski / српскохрватски: Nuklearno oružje
Simple English: Nuclear weapon
slovenčina: Jadrová zbraň
slovenščina: Jedrsko orožje
српски / srpski: Нуклеарно оружје
Seeltersk: Käädenwoape
Basa Sunda: Pakarang nuklir
svenska: Kärnvapen
Kiswahili: Bomu la nyuklia
తెలుగు: అణ్వాయుధం
Türkçe: Nükleer silah
татарча/tatarça: Атом-төш коралы
українська: Ядерна зброя
oʻzbekcha/ўзбекча: Yadro quroli
Tiếng Việt: Vũ khí hạt nhân
吴语: 核武器
中文: 核武器
Bân-lâm-gú: He̍k-chú bú-khì
粵語: 核武