அசிசியின் பிரான்சிசு

அசிசியின் புனித பிரான்சிசு
Saint Francis of Assisi
இறைவேண்டல் செய்யும்
புனித பிரான்சிசு
எல் கிரெக்கோவால் வரையப்பட்டது (1580–85).
மறைப்பணியாளர்; துறவி; சபை நிறுவுநர்
பிறப்பு1181/1182
அசிசி, இத்தாலி
இறப்புஅக்டோபர் 3, 1226
அசிசி, இத்தாலி
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை; ஆங்கிலிக்கம்; லூதரனியம்
புனிதர் பட்டம்திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி-ஆல் சூலை 16, 1228, அசிசி
முக்கிய திருத்தலங்கள்அசிசி நகர் பிரான்சிசு பெருங்கோவில்
திருவிழாசெப்டெம்பர் 17
அக்டோபர் 4
சித்தரிக்கப்படும் வகைசிலுவை, புறா, பறவைகள், விலங்குகள், காலருகில் ஓநாய், "அமைதியும் நன்மையும்", ஐந்து காயங்கள், "T" வடிவ சிலுவை.
பாதுகாவல்விலங்குகள், கத்தோலிக்க சேவை, சுற்றுச்சூழல், வணிகர், மேய்க்காவுயான் நகரம் (பிலிப்பீன்சு), இத்தாலி, பிலிப்பீன்சு, அடைக்கலம் தேடிப் பயணம் செய்வோர்.


அசிசியின் பிரான்சிசு (Francis of Assisi, 1181/1182 – அக்டோபர் 3, 1226) ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவரும் ஆவார்[1]. அவர் பிறந்த ஆண்டு கி.பி.1181 அல்லது கி.பி.1182 என்று கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர். பிரான்சிசு திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் 'குருப்பட்டம்' பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக, அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.

வரலாற்று ஆதாரங்கள்

புனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை வரலாறுபற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடுபற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.

பிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.

இத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித பிரான்சிசு பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த "அசிசியின் ஏழை மனிதரின்" (Poor Man of Assisi) எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபை தவிர புரடஸ்தாந்து குறிப்பாகஆங்கிலிக்கம், லூதரனியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.

Other Languages
Alemannisch: Franz von Assisi
azərbaycanca: Assizli Fransisk
Boarisch: Franz vo Assisi
беларуская: Францыск Асізскі
беларуская (тарашкевіца)‎: Францішак з Асізі
brezhoneg: Frañsez a Asiz
bosanski: Franjo Asiški
Avañe'ẽ: Francisco de Asís
Bahasa Indonesia: Fransiskus dari Assisi
မြန်မာဘာသာ: စိန့်ဖရန်စစ်(စ်)
norsk nynorsk: Frans av Assisi
Kapampangan: Francisco de Asis
português: Francisco de Assis
srpskohrvatski / српскохрватски: Franjo Asiški
Simple English: Francis of Assisi
slovenčina: František z Assisi
slovenščina: Frančišek Asiški
српски / srpski: Фрањо Асишки
Tiếng Việt: Phanxicô thành Assisi